TNRWD Foundation 
(TNRWD Trust)

Click here to edit subtitle

                  தமிழ்நாடு கிராம மகளிர் மேம்பாட்டுஅறக்கட்டளை  இணையதளம் 
                                         உங்களை அன்புடன் வரவேற்கிறது!

புடைவைகளில் கல்பதித்தல்

********************************************

பினாயில் தயாரிப்பு பயிற்சிகள்

*************************************************

தையல் கலை பயிற்சிகள்

**************************************************

பேன்சி நகை தயாரிப்பு பயிற்சி

**************************************************

சோப்பு தயாரிப்பு பயிற்சிகள்

**************************************************

புடைவைகளில் எம்ராடிங் பயிற்சி

************************************************

நமது மூலமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச தொழில் பயிற்சிகள் அளித்து தேவைகளுக்கு ஏற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்க்காகவே தமிழ்நாடு கிராம மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக ஒரு சிறப்பு திட்டம் வகுக்க பட்டுள்ளது. அதன் படி நமது அறக்கட்டளை மூலம் சொந்தமாக ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதற்காக‌ தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். அவர்களின் மூலம் தேர்ந்தெடுக்கபடும் கிராம / நகர பெண்கள் மற்றும் ஆண்களில் தையல்கலையில் ஆர்வமும் ஓரளவு வேலையும் தெரிந்தவர்களுக்கு முழுவதுமான‌ தையல் தொழில் பயிற்சி இலவசமாக அளித்து அவர்களுக்கு ஆயத்த ஆடைகள் தைக்கும் வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.  தையல் தொழில் மட்டும் இன்றி இன்னும் பல்வேறு சுய தொழில்களுக்கான தொழில் பயிற்சிகளை இலவசமாக அளித்து, தொழில் தொடங்க நுண்கடன் / அரசின் மானிய கடனுதவி பெறுவதற்கான உதவிகள் செய்யபடும்* (நாம் நேரடியாக கடன்களை வழங்குவதில்லை. கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்க உதவி புரிதல் போன்ற உதவிகள் மட்டுமே செய்கிறோம்). 


கற்றுக்கொண்ட தொழிலில் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தை படுத்த உதவிகள் செய்யபடும்.


இதற்கான சேர்க்கை நன்கொடையாக ஒரு முறை மட்டும் ரூ.60 (ரூபாய் அறுபது மட்டும்) பெறுகிறோம்.


உறுப்பினர்களுக்கு நாம் வழங்கும் சேவைகள்:


1. அடையாள அட்டை.

2. முற்றிலும் இலவசமான தையல் மற்றும் இதர சுய தொழில் பயிற்சிகள். ஆயத்த ஆடைகள் பிரிவில் தேவைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். 

3.இதர சுய‌ தொழில் பயிற்சிகள் : (ஏதேனும் ஒன்று மட்டும்)

        அ. மெழுவர்த்தி, சாம்ப்ராணி, ஊதுபத்தி வாஷிங்பவுடர்,பினாயில் சொட்டு நீலம் தயாரிப்பு.

        ஆ. போட்டோ லேமினேஷன் பயிற்சி

         இ. ஸ்கிரின் பிரிண்டிங் பயிற்சி

         ஈ . சேலைகளில் எம்ராடிங் , கல்/ஜிமிக்கி பதித்தல் பயிற்சி

         உ. பேன்ஸி நகை தயாரிப்பு பயிற்சி

         ஊ. அழகு கலை பயிற்சி.

    ஆகியவைகளை அளிப்பதுடன் தொழில் தொடங்க ஆலோசனைகள் மற்றும் விற்பனைகளுக்கு பயிற்சிகள் மற்றும் உதவிகள் செய்யபடும். அத்துடன் தொழில் தொடங்க நுண்கடன் / அரசின் மானிய கடனுதவி பெறுவதற்கான உதவிகள் செய்யபடும்* (நாம் நேரடியாக கடன்களை வழங்குவதில்லை. கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்க உதவி புரிதல் போன்ற உதவிகள் மட்டுமே செய்கிறோம்). 


நமது நிறுவனத்தில் நிர்வாக பணிகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு நடை பெற்று கொண்டிருக்கிறது. விவரங்கள் " Career" என்ற பிரிவில் காணலாம்.


உறுப்பினர்களாக சேர விரும்புவர்கள் அவரவர்கள் மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை " District Management " என்ற பிரிவில் பார்த்து மவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் மாவட்டத்தில் நிர்வாகி நியமிக்க படாமல் இருந்தால் நமது இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.